
posted 13th September 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
நல்லூர் கந்தசுவாமி கோயில் திருவிழா
யாழ்ப்பாணத்தில் நல்லூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலின் கோலாகலமான தேர்த்திருவிழா இன்று பதன் (13) கிழமை நடைபெற்றது.
இச் சரித்திரப் பிரசித்திபெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவிலின் தேர்த்திருவிழாவின் போது கணக்கிடமுடியாத பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கூடி முருகக் கடவுளின் தேரினைப் புடைசூழ வீதியினில் வலம் வந்து அனைவருக்கும் அருளபாலிக்கும் அழகினை பார்ப்பதற்கு இரு கண்கள் போதாது.
இத் திருவிழாவானது ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வருவதும், இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் பக்கதர்களின் வருகையும் கொறொனாக் காலத்தில் கட்டுப்படுத்தப் பட்டிருப்பினும், இவ்வாண்டு திருவிழாவிற்கு முன்னைய நாட்கள் போன்ற நிலைக்கு நாடு மீண்டு சகஜநிலைக்கு வந்ததனால் இன்று இத் திருவிழாவானது அனைவரினதும் ஆனந்தம் பொங்க நடைபெற்றது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)