
posted 24th September 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
தியாக தீபம் திலீபனின் நினைவு ஊர்திக்கு வடமராட்சியில் மக்கள் அஞ்சலி
ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்த தியாகி திலீபன் அவர்களது ஊர்திக்கு நேற்றிரவு சனி (23) வடமராட்சி நெல்லியடி பருத்தித்துறை பகுதிகளில் மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
நேற்று சனி பிற்பகல் வடமராட்சி கிழக்கு கேவில் பகுதியில் இருந்து ஆரம்பித்த தியாக தீபம் திலீபனின் ஊர்தி வலம் பிற்பகல் 6:30 மணியளவில் நெல்லியடியை வந்தடைந்தது. தொடர்ந்து பருத்தித்துறை ஊடாக இன்பருட்டிக்குச் சென்றது. நெல்லியடி, பருத்தித்திறை பகுதியில் மக்கள் மலரஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து இன்பருட்டியில் விசேடமாக அமைக்கப்பட்ட பந்தலில் மக்கள் திரண்டு அஞசலி செலுத்தினர்.
இதன் ஏற்பாட்டை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)