
posted 18th September 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
தனியார் வைத்தியசாலைகளின் பிரதிநிதிகள் ஆளுநருடான கலந்துரையாடல்
கிழக்கு மாகாணத் தனியார் வைத்தியசாலைகளின் பிரதிநிதிகளுடன் ஆளுநர் கலந்துரையாடல்!
கிழக்கு மாகாணத் தனியார் வைத்தியசாலைகளின் பிரதிநிதிகளுடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்று (17) இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் தனியார் வைத்தியசாலை அதிகாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
மேலும் மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் ஊடாக தனியார் வைத்தியசாலை பிரதிநிதிகளுக்கு மேலதிக உதவிகள் வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)