
posted 4th September 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
சிறுவர் மீதான வன்முறைகளை எதிர்த்து முல்லைத்தீவில் விழிப்புணர்வு பேரணி
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் இன்று (04) சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த கவனயீர்ப்பு பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.
ஏ.யு. லங்கா நிறுவனத்தினர் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துடன் இணைந்து இவ் விழிப்புணர்வு பேரணியினை முன்னெடுத்திருந்தனர்.
இதில் பிரதேச செயலாளர் எஸ். ஜெயகாந் , முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவ, ஏ.யு. லங்கா நிறுவனத்தின் செயற்திட்ட உத்தியோகத்தர் பி. நந்தகுமார், புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹேரத் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)