
posted 28th September 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
கல்முனை மாநகரில் இடம்பெற்ற மீலாதுன் நபி விழா
கல்முனை மாநகர பொதுச் சந்தை வர்த்தக சங்கம் ஏற்பாடு செய்திருந்த மீலாதுன் நபி விழா இன்று (28) வியாழக்கிழமை பொதுச் சந்தை முற்றத்தில் நடைபெற்றது.
சங்கத் தலைவர் ஏ.பி. ஜமால்தீன் ஹாஜியார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி, பிரதேச செயலாளர் ஜே. லியாகத் அலி, மாநகர உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம் உள்ளிட்டோர் அதிதிகளாக பங்கேற்றிருந்தனர்.
கல்முனை அஹ்லுல் சுன்னத்வல் ஜமாஅத் செயலாளர் மெளலவி முஹம்மத் நாஸர், மீலாதுன் நபி விழாவுக்கான சிறப்புச் சொற்பொழிவை நிகழ்த்தினார். சந்தை வர்த்தக சங்கத்தின் செயலாளர் ஏ.எல். கபீர் விழா நிகழ்வுகளை நெறிப்படுத்தியிருந்தார். இதன்போது வர்த்தகர்கள் மற்றும் பொது மக்களுக்கு மீலாத் கந்தூரியும் விநியோகிக்கப்பட்டது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)