
posted 6th September 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
அரபுக் கல்லூரியிலிருந்து 08 மாணவிகளுக்கு பல்கலைக்கழக வாய்ப்பு
சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரியில் இருந்து இம்முறை 08 மாணவிகள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளனர் என்று கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் எஸ்.எச். ஆதம்பாவா மதனி தெரிவித்தார்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள க.பொ.த.உயர்தர பரீட்சை முடிவுகளின் பிரகாரம் பரீட்சைக்கு தோற்றிய 20 மாணவிகளுள் 19 பேர் அனைத்து பாடங்களிலும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
இவர்களுள் 08 மாணவிகள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றிருப்பதுடன் ஒரு மாணவி மூன்று பாடங்களிலும் ஏ சித்திகளை பெற்றுள்ளார். கடந்த காலங்களை விட இம்முறை நிறைய ஏ சித்திகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
இக்கல்லூரியில் கடந்த முறை 10 மாணவிகள் பரீட்சைக்குத் தோற்றி, 04 மாணவிகள் பல்கலைக் கழகங்களுக்கு தெரிவாகியிருந்தனர்.
2012ஆம் ஆண்டு தொடக்கம் சாய்ந்தமருதில் இயங்கி வருகின்ற
தைபா மகளிர் அரபுக் கல்லூரியில் இருந்து இதுவரை 38 மாணவிகள் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெற்றுள்ளனர் என்றும் அதிபர் எஸ்.எச். ஆதம்பாவா தெரிவித்தார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)