
posted 20th September 2022
நிந்தவூர் ஹிக்மா விளையாட்டுக்க கழகம் கடந்த மூன்று வாரங்களாக நடாத்திய "ஹிக்மா வெற்றிக் கிண்ணம் - 2022" மென்பந்து கிரிக்கெட் சுற்றுத் தொடரின் இறுதி நாள் நிகழ்வு நிந்தவூர் வெளவாளோடை கடற்கரை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
ஹிக்மா விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஐ.எல்.எம். ஜாபிர் தலைமையில் இடம்பெற்ற இறுதி நாள் நிகழ்விற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளரும் நிந்தவூர் பிரதேச சபையின் கெளரவ தவிசாளருமான எம்.ஏ.எ. அஸ்ரப் தாஹிர் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.
குறித்த சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டியில் நிந்தவூர் ஹிக்மா மற்றும் ஒலுவில் இலவன் ஸ்டார் ஆகிய அணிகள் போட்டியிட்டு நிந்தவூர் ஹிக்மா விளையாட்டுக் கழகம் சம்பியன் பட்டத்தை தனதாக்கியதுடன் ஒலுவில் இலவன் ஸ்டார் விளையாட்டுக் கழகம் ரன்னர் அப்பாக தெரிவானது.
சம்பியனாக தெரிவு செய்யப்பட்ட கழகத்திற்கும் வீரர்களுக்கும் வெற்றிக் கிண்ணம் மற்றும் பரிசில்களையும் தவிசாளர் மற்றும் அதிதிகள் வழங்கி வைத்திருந்தனர்.
இந் நிகழ்வில் நிந்தவூர் பிரதேச சபையின் கெளரவ உறுப்பினர் சட்டத்தரணி ஏ.எல். றியாஸ் ஆதம், நிந்தவூர் அனைத்து விளையாட்டுக்கழக சம்மேளனத்தின் தலைவர் சட்டத்தரணி ஏ. நசீல், அம்பாரை மாவட்ட கபடி பயிற்றுவிப்பாளர் திரு. அனஸ் அஹமட், நிந்தவூர் -09 ஆம் பிரிவு கிராம சேவை உத்தியோகத்தர் நளீம், பிரபல தொழில் அதிபரும் ஆதம் அலி பெளன்டேஷனின் நிறைவேற்று பனிப்பாளருமான ஆதம் அலி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது எலிசபத் மகா இராணியின் மறைவினையொட்டு இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் தேசியக் கொடி அறைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)