
posted 11th September 2022
யாழ்ப்பாணம் வடமராட்சி ஹாட்லிக் கல்லூரியின் 1998 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தர அணியினரினால் சனிக்கிழமை (10) இரண்டு இலட்சம் பனை விதைகள் நடும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
புலம் பெயர் மற்றும் உள்ளூர் பழைய மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் விருந்தினர்களாக வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் ஆழ்வாப்பிள்ளை சிறி, பனை அபிவிருத்திச் சபை பொது முகாமையாளர் திரு லோகநாதன், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை முகாமையாளர் பொறியியலாளர் ஜெகதீசன், ஆகியோர் கலந்து கொண்டு பனம் விதைகளை நடுகை செய்து தொடக்கி வைத்தனர்.
காலை 8 மணி முதல் ஆரம்பமான குறித்த நிகழ்வு இன்று பிற்பகல் 4 மணிவரை இடம்பெற்றது.
குறித்த இரண்டு இலட்சம் பனம் விதைகள் நடுகை நாளையும் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரையும் இடம்பெறவுள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY