ஸ்ரீசெல்வமுத்துமாரி அம்மன் ஆலயத் திருவிழாவில் 10ம் நாள் தேர்த்திருவிழா

கடந்த மாதம் 31ந் திகதி (31.08.2022) மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள இப் பகுதியில் பிரசித்திப்பெற்ற ஆலயங்களில் ஒன்றாக விளங்கும் ஸ்ரீசெல்வமுத்துமாரி அம்மன் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய இவ் வருடாந்த விழாவில் வெள்ளிக்கிழமை (09.09.2022) தேர்த் திருவிழா இடம்பெற்றது.

இவ் ஆலயத்தின் பதினொரு நாட்களைக் கொண்ட மஹோட்சவத்தின் வெள்ளிக்கிழமை (09) பத்தாவது தேர்த்திருவிழாவில் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீசெல்வமுத்துமாரி அம்மன் ஆலயத் திருவிழாவில் 10ம் நாள் தேர்த்திருவிழா

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)