விசுவமடு  எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் மீது தாக்குதல்

முல்லைத்தீவு விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 04.09.2022 இன்றைய தினம் மாலை 5.30 மணியளவில் அதன் முகாமையாளர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;

செல்லுபடியற்ற QR முலம் எரிபொருள் பெறுவதற்கு சிலர் முயன்றுள்ளனர். இதனால் குறித்த எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் எரிபொருள் வழங்க மறுத்ததையடுத்து ஆத்தியமடைந்த குழு ஒன்று எரிபொருள் நிலையத்திற்குள் அத்துமீறி உள் நுழைந்து முகாமையாளரை தாக்க முயன்றுள்ளார்.

இந்நிலையில் முகாமையாளரை தாக்க முற்பட்டவர்களை நிலையத்தில் நின்ற சக உழியர் முகாமையாளரை தாக்கவந்தவர்களை தடுத்து நிறுத்தினர்.

அதனையடுத்து ஆத்திரமடைந்தவர்கள் முகாமையாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதுடன் அங்கிருந்த கதிரைகளை தூக்கி வீசிவிட்டுச் சென்றுள்ளனர். இச்சம்பவம் நடைபெரும் பொழுது புதுக்குடியிருப்பு பொலிசார் எரிபொருள் நிலையத்தில் கடமைபுரிந்துள்ளனர். அதனையும் பொருட்படுத்தாது தாக்குதல் நடத்தபட்டதையடுத்து காயமடைந்த உதவி முகாமையாளர் தருமபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன் முகாமையாளர் கூறுகையில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து எரிபொருள் நிரப்புநிலையத்திற்கு ஒர் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும்வரை எரிபொருள் நிரப்பு நிலையம் மூடப்பட்டிருக்கும் எனவும் முகாமையாளர் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதன் போது எரிபொருள் பெறவந்தவர்கள் எரிபொருள் பெறமுடியாதநிலை ஏற்பட்டது.

விசுவமடு  எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் மீது தாக்குதல்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)