
posted 24th September 2022
நாம் வாக்களித்து முடிந்தவுடன் நினைக்கின்றோம் எமது கடமைகள் இத்துடன் முடிந்து விட்டது என்று. ஆனால், உண்மையான ஜனநாயகம் என்பது நாம் அரசியல் பிரதிநிதியை தெரிவதிலிருந்து அரசாங்கம் எடுக்கின்ற தீர்மானங்கள் வரை எமது பங்களிப்பு இருக்க வேண்டும். ஆனால், இந்த நடைமுறை இங்கு இல்லையென மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் இவ்வாற தெரிவித்தார்.
முன்மொழியப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழு தீர்மானங்களை முறைப்படுத்துவதற்காகவும் , மக்கள் மயப்படுத்துவதற்காகவும் , தேர்தல்கள் ஆணைக் குழுவின் ஏற்பாட்டில் தேர்தல் சட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் தொடர்பிலான தொடர் கலந்துரையாடல் மன்னாரில் வியாழக்கிழமை (22) நடைபெற்றபோது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் தொடந்து இங்கு உரையாற்றுகையில்;
தேர்தல் ஆணைக்குழுவானது ஜனநாயக ரீதியில் தேர்தலை நடாத்துவதற்காக மக்களின் கருத்துக்களை கேட்கும் முகமாக மாவட்டங்கள் தோறும் இவ்வாறான கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றது.
இதற்கமைய மன்னாருக்கும் இக் குழு வருகை தந்துள்ளது. ஜனநாயக ரீதியிலான அரசியல் இவ்வாறு ஜனநாயக ரீதியிலான தேர்தல் நடைபெற வேண்டும் என்பதே இத் தேர்தல் ஆணைக்குழுவின் நோக்கமாக இருக்கின்றது.
மொறிஸ் என்ற அறிஞர் சொல்லுகின்றார் நம்பிக்கை இரண்டு விதமாக இருக்கின்றது.
ஒன்று, சமூக நம்பிக்கை, மற்றையது, அரசியல் நம்பிக்கை. சமூக நம்பிக்கை என்பது எமது பெற்றோர், உற்றார், நண்பர்கள் என இவ்வாறு அரசியல் நம்பிக்கை என்பது அரசு அரசாங்கம் அரசியல்வாதிகள் தேர்தல் திணைக்களம் இவ்வாறான அரசியலோடு சம்பந்தமானவையாகும்.
மக்கள் அரசியலில் பங்கேற்பது ஜனநாயகத்தின் மிகவும் முக்கியமான பங்கு.
ஜனநாயகம் என்பது மக்கள், மக்களை, மக்களுக்காக, மக்களை ஆளுதல் என்பதை ஜனநாயகம் என சொல்லுகின்றோம்.
நம்பிக்கை என்பது அரசியல் வாதிகள் அரசு அரசாங்கம் இவற்றில் நாம் வைக்கும் நம்பிக்கையே ஜனநாயகத்தை கட்டியெழுப்பும்.
நாம் பிரதிநிதிகளை தெரிவு செய்கின்றோம். இது எமக்கு வழங்கப்பட்ட ஒரு பெறுமதியான சுதந்திரம்.
நாம் வாக்களித்து முடிந்தவுடன் நினைக்கின்றோம் எமது கடமைகள் இத்துடன் முடிந்து விட்டது என்று. ஆனால், உண்மையான ஜனநாயகம் என்பது நாம் அரசியல் பிரதிநிதியை தெரிவதிலிருந்து அரசாங்கம் எடுக்கின்ற தீர்மானங்கள் வரை எமது பங்களிப்பு இருக்க வேண்டும்.
நாம் தெரிந்து எடுத்து பாராளுமன்றம் அனுப்பும் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் எடுக்கப்படும் தீர்மானங்களை மக்கள் மத்தியில் முன்னிலைப்படுத்தி அதற்கு ஆதரவு அல்லது ஆதரவின்மை அளிக்கும் முறை கிடையாது. ஆனால், நாம் அனுப்பிய பிரதிநிதியில் நம்பிக்கை வைத்துள்ளோம்.
புலம்பெயர்ந்தோர் நோர்வேயிலிருந்து தெரிவிக்கின்றனர். ஆசிய நாடுகளுக்கு ஒரு சாபம் என தெரிவிக்கின்றனர். அதாவது, யாரிடம் பணம் அதிகமாக இருக்கின்றதோ அவர்கள்தான் அரசியல் வாதிகளாக வர முடியும் என்று.
இதற்கு நோர்வேயின் நடைமுறை அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை வழங்கி வருகின்றது.
சிங்கப்பூரை கட்டி எழுப்பின லீக்குவான் சிங் இலங்கைக்கு வந்தவர். இலங்கையை பார்த்துவிட்டு தானும் சிங்கபூரை குறுகிய காலத்தில் சிங்கபூரை இவ்வாறு கட்டியெழுப்புவேன் என சென்றார்.
ஆனால், இன்று நாம் வேலைத்தேடி சிங்கபூருக்கு செல்லும் நிலை உருவாகி விட்டது.
தலைமைத்துவம் சிறப்பாக இருக்க வேண்டும். லீக்குவான் சிங் சிங்கபூரில் பல இன மக்கள் வாழுகின்ற போதும் அங்கு தேசிய மொழியாக ஆங்கிலத்தை கொண்டு வந்தார்.
இவர் சீனாக்காரராக இருந்தும் சீனா நாட்டு மக்கள் அங்கு அதிகமானோர் வாழ்ந்தபோதும் சீனா மொழியை தெரிந்தெடுக்காது தூர நோக்குச் சிந்தனையில் ஆங்கிலத்தை கொண்டு வந்தமையால் இன்று அந்த நாடு நன்கு கட்டியெழுப்பப்பட்ட நாடாக காணப்படுகின்றது.
1956 ஆம் ஆண்டு அவர் இலங்கைக்கு வந்தபொழுது இங்கு தனி மொழி சட்டத்தால் நடந்த சம்பவங்களை நேரடியாக பார்த்தபோதே அவருக்கு தூரநோக்கு செயல்பாடு எற்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது.
இவ்வாறு மக்களுக்காக சிந்திக்கக் கூடிய நல்ல பிரதிநிதிகளை நாம் தெரிவு செய்ய வேண்டும்.
பெண்களுக்கு அரசியல் அமைப்பில் பெரும் பங்கு தேவையென கூறப்படுகின்றது. உள்ளுராட்சி மன்றங்களில் 25 வீதம் பெண்கள் இருக்க வேண்டும் என தெரிவித்தும் பிரதிநிதித்துவத்தில் குறைவாகவே காணப்படுகின்றனர்.
இலங்கையில் பெண் பிரதமராக, ஜனாதிபதியாக இருந்துள்ளனர். நன்கு படித்த பண்புள்ள பெண்கள் இருக்கின்றார்கள். இவர்கள் அரசியலுக்குள் வர ஏன் அச்சம் கொள்ளுகின்றார்களோ தெரியவில்லை. இது மாற்றம் பெற வேண்டும்.
இவ்வாறு பெரியோரின் அனுபவம், இளைஞர்களின் துடிப்பு, பெண்களுக்கான உயர்வான தன்மை இவ்வாறு ஒன்றிணைந்த அரசியல் பிரதிநிதிகள் உருவாக வேண்டும் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY