யாழ். மாவட்ட சித்த மருத்துவமனை - அச்சுவேலி செல்வநாயகபுரத்தில்

யாழ். மாவட்ட சித்த மருத்துவமனை தற்போது அச்சுவேலி செல்வநாயகபுரத்தில் அமைந்துள்ள சிறுவர் நந்தவனம் பாடசாலை (மக்கோனா) அருகில் இடம்பெற்று வருகின்றது.

இங்கு பொதுமக்கள் இலவச மருத்துவ சேவையை பெற்றுக்கொள்ள முடியும்.

பொதுவான நோய்களுக்கான வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு இடம்பெற்று வருகின்றது.

வெளிநோயாளர்களை மருத்துவர்கள் பார்வையிடும் நேரம் – திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8 மணிமுதல் பிற்பகல் 4மணி வரையும், சனி, ஞாயிறு தினங்களிலும் அரச விடுமுறை தினங்களிலும் காலை 8மணி முதல் நண்பகல் 12 மணி வரையும் இடம்பெறும்.

அத்துடன் கடந்த 01ஆம் திகதியிலிருந்து தங்கி நின்று கிசிச்சை பெறும் உள்ளக நோயாளர் விடுதி நோயாளர்களுகளின் நலன் கருதி சகல வசதிகளுடனும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சித்த மருத்துவமனையில் வதரோகம், சிறுவர் நோய்கள், தோல் நோய்கள், சுவாச நோய்கள், பெண்களுக்கு ஏற்படும் நோய்களும் அதற்கான தீர்வுகளும், சலரோகம், குருதி அமுக்கம், உடற்பருமன், குறிப்பாக தொற்று நோய்கள் என பலதரப்பட்ட நோய்களுக்கான சிகிச்சைகள், காய்ச்சல், தடிமன். சளி, தும்பல் (பீனிசம்), தலைமுடி உதிர்தல், முகப்பருக்கள், அக்குபஞ்சர் சிகிச்சை முறை, வர்ம சிகிச்சை, பஞ்சகர்ம சிகிச்சை, அட்டை விடுதல் (வரிக்கோசு), சுட்டி முறை சிகிச்சை (ஆணிக்கூடு அகற்றுதல்) பாரம்பரிய வைத்திய முறையிலும் சிகிச்சைகள் இடம்பெறுகின்றன.

நெறிவு முறிவு சிகிச்சை முறை, பழைய நோக்களுக்கு பத்துக்கட்டுதல், உளுக்கு, சுழுக்கு பார்த்தல் போன்ற பல தரப்பட்ட சிகிச்சை முறைகள் திறம்பட பாரம்பரிய வைத்தியர்களினால் வழங்கப்பட்டு வருகின்றன.

உள்நாட்டு, வெளிநாட்டு நோயாளர்கள் கட்டணம் செலுத்தி விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் சிறப்பு மருத்துவ சேவையும் இடம்பெறவுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்கு ஏற்ற வகையில் நோயாளர் விடுதி அமைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான தனி அறை, மலசல கூடம், உணவு, சிறந்த சூழலுடன் இசைந்த சிறப்பு மருத்துவ சேவையும் வழங்கப்படவுள்ளது.

இந்த சேவையைப் பெற விரும்புகின்ற நோயாளர்கள் முற்பதிவை சித்த வைத்தியசாலையில் பதிவு செய்து கொள்ள முடியும்

தொலைபேசி இலக்கம்

077 378 2739

021 221 2809 என்று மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

யாழ். மாவட்ட சித்த மருத்துவமனை - அச்சுவேலி செல்வநாயகபுரத்தில்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)