
posted 6th September 2022
அனுமதிப் பத்திரங்களில் மோசடி செய்து மணலேற்றிச் சென்ற எட்டு டிப்பர் வாகனங்களை சாவகச்சேரி பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், அதன் சாரதிகள் எண்வரையும் பொலிஸார் இன்றைய தினம் செவ்வாய்க் கிழமை (06) கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் கண்டி வீதியூடாக யாழ்ப்பாணம் நோக்கி மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனங்களை கைதடி பகுதியில் சாவகச்சேரி பொலிஸார் சோதனையிட்டபோதே இந்த மோசடி தெரிய வந்தது.
அதனை அடுத்து குறித்த டிப்பர் வாகனங்களை கைப்பற்றிய சாவகச்சேரி பொலிஸார், அனுமதிப் பத்திரங்களில் மோசடி செய்த குற்றத்தில் சாரதிகளை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சாரதிகளையும், கைப்பற்றப்பட்ட டிப்பர் வாகனங்களையும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)