
posted 12th September 2022
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் ஊர்திவழிப் போராட்டமாகச் சென்று கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்றும் (12) முன்னெடுக்கப்பட்டது.
யாழில் இன்று திங்கட்கிழமை (12) மூன்றாவது நாளாக வடமராட்சியில் இந்த ஊர்திவழிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்தக் கையெழுத்து திரட்டும் பிரசார நடவடிக்கை வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ். சுகிர்தன் தலைமையில் நடைபெற்றது.
வடமராட்சியில் வல்லை முனியப்பர் கோயில் முன்பாக தேங்காய் உடைத்து ஊர்திவழிக் கையெழுத்துப் போராட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த ஊர்திவழிப் போராட்டத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சியினுடைய வாலிபர் முன்னணியும் சர்வஜன நீதி அமைப்பும் தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் கூட்டமைப்பும் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)