மாணவிக்கு நேரில் பாராட்டு

அட்டாளைச்சேனைப் பிரதேசத்திலிருந்து இம்முறை மருத்துவத்துறைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள லாபீர் ஜீனா எனும் மாணவியை, சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் நேரில் சென்று பாராட்டிகௌரவித்துள்ளார்.

குறித்த மாணவியின் அட்டாளைச்சேனையிலுள்ள வீட்டுக்கு நேரில் சென்ற தலைவர் ரவூப் ஹக்கீம், மாணவியின் குடும்பத்தினரிடம் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுடன்,

மாணவி லாபீர் ஜீனாவுக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டியும் கௌரவித்ததுடன் தமது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

தலைவர் ஹக்கீமுடன் பிரதேச கட்சி முக்கியஸ்தர்களும் சென்று மாணவியைப் பாராட்டிய அதேவேளை அண்மைக்காலமாக முஸ்லிம் மாணவிகள் கல்வித்துறையில் அபரிமித முன்னேற்றமும், சாதனைகளும் நிலைநாட்டிவருவதாக கருத்து வெளியிட்டார்.

மாணவிக்கு நேரில் பாராட்டு

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY