
posted 15th September 2022
மன்னார் கொழும்பு சேவையில் ஈடுபட்ட இலங்கை போக்குவரத்து சபை பஸ் வண்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதை பொருள் இராணுவத்தினால் கண்டு பிடிக்கப்பட்டபோதும் எவரும் கைது செய்யப்படவில்லை.
புதன்கிழமை (14.09.2022) இரவு 8 மணிக்கு மன்னாரிலிருந்து கொழும்புக்கு பயணிகளுடன் சென்ற இலங்கை போக்குவரத்து சபை பஸ் வண்டியை மன்னார் பாலத்தடியில் வைத்து ராணுவத்தினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது பஸ் வண்டியில் பின் ஆசனத்தில் 150 கிராம் ஐஸ் போதை பொருள் மறைத்து வைத்திருக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது
இதைத் தொடர்ந்து அதில் பயணித்திருந்த பிரயாணிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போதும் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.
இருந்த போதும், இவ் பஸ் வண்டியின் சாரதியும் காப்பாளரும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின் போக்குவரத்து சேவையை தொடர்ந்து மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)