
posted 29th September 2022
மன்னாரில் தமிழ் பற்றாளராக தமிழர் விடுதலைக் கூட்டனியை இறுக்கமாக பற்றி பிடித்திருந்த தூண் சரிந்து வீழ்ந்தது. அதாவது மன்னார் மாவட்ட முன்னாள் மாவட்ட அபிவிருத்தி சபைத் தலைவர் பி.எம். செபமாலை (வயது 81) புதன்கிழமை (28.09.2022) காலமானார்.
இவர் தனது ஆரம்பக் கல்வியை பாலைக்குழி றோமன் கத்தோலிக்க தமழ் கலவன் பாடசாலையிலும் பின் 4ஆம் ஆண்டிலிருந்து 11 ம் வகுப்பு வரை மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையிலும் பின் கொழும்பு சென். பெனடிக் கல்லூரியில் கல்வி பொது தராதர உயர்தர படிப்பை தொடர்ந்தார்.
இவர் பெனடிக்ற் கல்லூரியில் கற்றபோது உதைபந்தாட்ட விளையாட்டில் சிறப்பாக மிளிர்ந்தவர்.
இவர் தமிழர் விடுதலைக் கூட்டனியில் இணைந்து தமிழர் உரிமைக்காக மேடைப் பேச்சுக்களை நிகழ்த்தி வந்ததுடன் 1972 இல் மாந்தை வடக்கு கிராமோதய சபை தலைவராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
பின் 1981 லிருந்து 1983 ஆம் ஆண்டு வரை இவர் மன்னார் மாவட்ட அபிவிருத்தி சபைத் தலைவராக செயல்பட்டார்.
இவர் விளையாட்டுத் துறையில் மாத்திரமல்ல நாட்டுக் கூத்துக்கள் கவிதைகள் போன்ற சிறந்த எழுத்தாற்றல் கொண்டவராக நூல்கள் பல வெளியீடு செய்துள்ளார்.
முருங்கன் முத்தமிழ் கழகத்தினால் 'ஆய்வறிந்த தலைமகன்' என்ற விருது மாத்திரமல்ல இவருடைய சமூகத்தினால் இவர் 'வாழ்நாள் தலைவன்' என்ற விருதையும் பெற்றவர்.
இவர் கிராம சபைத் தலைவராக மற்றும் மாவட்ட அபிருத்தி சபைத் தலைவராக இருந்த காலத்தில் மன்னார் மாவட்டத்தில் பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்தவர்
தலைமைத்துவ பதவிகளைத் தாங்கியிருந்த போதும், கூட்டத்தின் போதும் தனி மனித உரையாடுதலின் போதும் எவரையும் கடிந்து பேசாது எந்நேரமும் தனது புன்முறுவலாலேயே அனைத்தையும் சாதித்து வந்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இவரிடம் காணப்பட்ட இன்னொரு குணம் என்னவென்றால் யாரையும் கண்டிக்க வேண்டிய தருணம் வருகின்றபோதும் அவர்களை கண்டித்தாலும் தண்டிக்காது இருந்து வந்த மகான் என பலராலும் போற்றப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY