
posted 23rd September 2022
மன்னார் மாவட்டத்தின் மனிதவலு மற்றும் வேலைவாப்பு திணைக்களத்தின் தொழில் நிலையத்தினால் மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மாபெரும் மாவட்ட தொழிற் சந்தை நடாத்தப்பட்டதில் அதிகமான தொழிலுக்காக அழைந்து திரியும் இளைஞரும், யுவதிகளும் மற்றும் தொழில் வழங்கும் நிறுவனங்களும் கலந்து கொண்டனர்.
இத் தொழிற் சந்தையானது மன்னார் நகர சபை மண்டபத்தில் புதன்கிழமை (21.09.2022) முற்பகல் 9 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் வரை இடம்பெற்றது.
இந் நிகழ்வுக்கு மன்னார் மாவட்ட செயலாளரும், அரசாங்க அதிபருமாகிய திருமதி அ. ஸ்ரான்லி டிமெல் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பரமானந்தன், மன்னார் பிரதேச செயலாளர் எம். பிரதீப், மாவட்ட திட்டப்பனிப்பாளர் க. மகேந்திரன், மாவட்ட சமூர்த்தி பணிப்பாளர் அலியார் தொழில்நுட்ப கல்லூரி அதிபர் சி. பிரேம றஞ்சன் மன்னார் நகரம் கிராம நிர்வாக அலுவலகர் அந்தோனி செபமாலை டல்மேய்டா உட்பட பலர் இதில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் தொழில் நிறுவனங்களின் முக்கியஸ்தர்கள் தங்கள் நிறுவனங்களின் செயல்பாடுகளையும், இதற்கான வேலை வாய்ப்புக்களையும் இதில் இணைந்து கொள்வதற்கான தகுதிகளையும் விளக்கமாக தெளிவுபடுத்தியதுடன் இதில் இணைய விரும்பியோரின் பெயர் விபரங்களையும் பதிவு செய்து கொண்டனர்.
மன்னார் உதவி மாவட்ட செயலாளர் வி. சிவராஜா மற்றும் மனித வலு அபிவிருத்தி அலுவலகர் திருமதி ஜே.அர்.சி. லெம்பேட் ஆகியோர் இதற்கான சகல எற்பாடுகளையும் மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY