
posted 30th September 2022
புதிதாக அமையவுள்ள மதுபான நிலையத்துக்கு மக்கள் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.
கிளிநொச்சி கரடிப்போக்கு சந்தியை அண்மித்த பகுதியில், புதிதாக மதுபான விற்பனை நிலையத்துக்கான அனுமதி வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (30) பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த போராட்டம் நேற்றுக் (29) காலை 9.30 மணியளவில், அனுமதி வழங்கப்பட்ட பகுதியில் இடம்பெற்றது.
இதன்போது, குறித்த அனுமதியை இரத்து செய்யுமாறு பதாதைகளை ஏந்தி மக்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
இதன்போது, செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையில் குறித்த நிலையத்தினரால் ஒளிப்படம் எடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)