மணி விழா காணும் ஏழு சென்.மேரிஸ் வித்தியாலய ஆசிரிகைகள்

மன்னார் கல்வி வலயத்திலுள்ள பேசாலை சென்.மேரிஸ் வித்தியாலயத்தில் கற்பித்த ஏழு ஆசிரியர்களுக்கு மணி விழாவும் அத்துடன் நூல் வெளியீடும் இடம்பெறுகின்றது..

பேசாலை சென்.மேரிஸ் வித்தியாலயத்தில் நீண்ட காலமாக ஆற்றல் மிகு ஆசிரியர்களாக இருந்து அரும்பணியாற்றி, கற்பித்து தற்பொழுது ஓய்வுபெற்றுச் சென்றுள்ள ஆசிரியர்கள் திருமதிகள் மேரி வசந்தி மருசலின் குரூஸ் , ஜேன் காமலிற்றா லெம்பேட், நாகராசா நிர்மலா லுமினா, ஜாக்குலீன் (அமிற்றா) கொன்சால் வாஸ் கூஞ்ஞ, அமலவதி ஜெயசீலி லீனஸ் கூஞ்ஞ, பிறிசில்லா செல்வராணி ரெக்ஸ் பீரிஸ், அனற் அருந்ததி தேவகுமார் ஆகியோரின் பெறுமதி மிக்க சேவையைப் பாராட்டியே பேசாலை சென்.மேரிஸ் வித்தியாலய அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் இப் பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் யாவரும் இணைந்து இச் சேவை நலன் பாராட்டு விழாவை நடாத்துகின்றனர்.

வியாழக்கிழமை (08.09.2022) காலை 10 மணியளவில் சென். மேரிஸ் வித்தியாலயத்தின் சிசிலியா மண்டபத்தில் இவ் விழா இடம்பெறுகின்றது.

இத்துடன் இவ் விழாவில் கௌரவிக்கப்படும் ஆசிரியை திருமதி மேரி வசந்தி மருசலின் குரூஸ் அவர்களினால் ஆரம்பக் கல்வி மாணவர்களுக்காக ஆக்கப்பட்ட 'இசையால் இசைவோம்' என்னும் நூல் மற்றும் இறுவட்டு வெளியீடும் இங்கு இடம்பெறுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மணி விழா காணும் ஏழு சென்.மேரிஸ் வித்தியாலய ஆசிரிகைகள்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)