
posted 13th September 2022
மகாகவி சுப்பிரமணிய இன்று பாரதியாரின் 101ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வு யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
நல்லூர் - அரசடியில் பாரதியாரின் உருவச்சிலை முன்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 12மணியளவில் இந்தநிகழ்வு நடைபெற்றது.
இதன்போது, மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம், சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன், வலி. கிழக்கு பிரதேச சபை தவிசாளர் நிரோஷ் வலி.மேற்கு பிரதேச சபை தவிசாளர் நடனேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)