போதைப்பொருள் பாவனை எதிரான பேரணி

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளின் பாவனை குறிப்பாக இளம் சமுதாயத்துள் அதிகரித்துள்ளதாலும், அதன் பாவனையினால் அதிகரித்து வரும் மரணங்களாலும், மேலும், அதனுடன் தொடர்புடைய சமுதாயத்திற்கு உகந்ததில்லாத பழக்கவளக்கங்கள் இவ்வயதினருள் ஊடுருவி சமுதாயத்தையே நாசமாக்கிக்கொண்டிருப்பதனாலும், இப்பயங்கரமான நாசகொல்லியிடமிருந்து மக்களைக் காப்பற்றவே போதைப் பொருள் பாவனைக்கு எதிராக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் நடவடிக்கையாக யாழ். போதனா வைத்தியசாலை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று வியாழக்கிழமை (29) பேரணி முன்னெடுக்கப்பட்டது.

யாழ். போதனா வைத்தியசாலை முன்றலில் இந்த பேரணி ஆரம்பித்து மணிக்கூட்டு கோபுர வீதியூடாக, யாழ் பொலிஸ் நிலையத்தை அடைந்து, அங்கிருந்து பிரதான வீதியூடாக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தை சென்றடைந்தமை குறிப்பிடத்தக்கது.



மேலும் வாசிக்க கிளிக் செய்யவும்>>>>> கூடுதலான போதைப்பொருள் பாவனை யாழ்ப்பாணத்தில்

மேலும் வாசிக்க கிளிக் செய்யவும்>>>>> போதைப் பொருளுக்கு ளால் பாதிப்பானவர்க்கு விடுதி வசதிகள் யாழ்ப்பாணத்தில் தேவை

போதைப்பொருள் பாவனை எதிரான பேரணி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)