
posted 13th September 2022
நடப்பு வருடமாகிய 2022 ஆண்டுக்கான மறைக் கல்வி வாரம் மன்னார் மறைமாவட்டத்தில் பேசாலை புனித வெற்றிநாயகி ஆலயப் பங்கில் ஞாயிற்றுக்கிழமை (11.09.2022) ஆரம்பமாகி 18.09.2022 ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற இருக்கின்றது.
இதன் ஆரம்ப நிகழ்வு பேசாலை பங்குத் தந்தை அருட்பணி ஏ. ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (11) காலை 7.30 மணியளவில் மறைவாழ்வு கொடியேற்றப்பட்டு மறைமாவட்ட மறைக்கல்வி இயக்குனரின் கூட்டுத்திருப்பலியுடன் தொடக்கி வைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து இம் மறைக்கல்வி வாரத்தை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் மறைவாழ்வு பணியாளர்களை மத்தேயு , மார்க் , லூக்கா மற்றும் யோவான் என நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு மாணவர்களுக்கிடையே பேச்சு, கட்டுரை, கவிதை, பைபிள் சார்ந்த விளையாட்டுப் போட்டிகள், கத்தோலிக்க பாட்டுக்குப் பாட்டு மற்றும் கருத்தமர்வுகள் போன்ற நிகழ்வுகளும் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)