
posted 10th September 2022
புலம்பெயர் உறவுகளின் உதவியுடன் உலருணவுப் பொதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது. தொழிலின் நிமித்தம் புலம்பெயர்ந்து வாழும் இளைஞர் அமைப்பான "வணக்கம் வாழ்க தமிழ்" அமைப்பினால் குறித்த உலருணவு பொதி இன்று (10) வழங்கி வைக்கப்பட்டது.
கடந்த மாதம் (ஆகஸ்ட்) 30 மற்றும் இம்மாதம் (புரட்டாதி) 8ம் திகதி பிறந்த நாட்களை சுவிஸ் மற்றும் கனடா நாட்டில் வசிக்கும் புலம்பெயர் உறவுகள் இருவரின் அன்பளிப்பாக வழங்கப்பட்ட 380,000 ரூபா நிதியில் குறித்த உலருணவு பொதிகள் வழங்கப்பட்டன.
"வணக்கம் வாழ்க தமிழ்" அமைப்பின் நிறுவுனர் அமல்ராஜ் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம், கனகாம்பினைக்குளம், பொன்னகர், செல்வபுரம் ஆகிய கிராமங்களில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களிற்கு குறித்த உலருணவு பொதிகள் இன்று பகிர்ந்தளிக்கப்பட்டன.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)