
posted 17th September 2022
புத்தூர் ஸ்ரீசோமாஸ்கந்த கல்லூரியில் ஒரே தடவையில் 9 திறன் வகுப்பறைகள் பழைய மாணவர்களால் அமைத்து வழங்கப்பட்டன. இந்த திறன் வகுப்பறைகள் பழைய மாணவர்களோடு இரட்ணம் நிதியம் லண்டன் அமைப்பினரின் ஸ்தாபகர் டாக்டர் நித்தியானந்தனின் பங்களிப்போடு சிறப்பாக அமைக்கப்பட்டது. இந்த வகுப்பகைள் கடந்த 6ஆம்திகதி கையளிக்கப்பட்டன.
பாடசாலை அதிபர் சி. திரிகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ரா. வரதீஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். வட மாகாண கல்வித் திணைக்களப் பணிப்பாளர் செ. உதயகுமார், யாழ். கல்வி வலய கல்விப் பணிப்பாளர் மு. இராதாகிருஷ்ணன், கோட்டக் கல்வி அலுவலர் நா. சிவநேசன், தென்மராட்சி வலய ஓய்வுநிலை கல்விப் பணிப்பாளர் எஸ். கிருஷ்ணகுமார், சிவசக்தி மணிமண்டப நிறுவனர் வே. சிவசுந்தரம், ஸ்ரீ சோமாஸ்கந்த கல்லூரி ஓய்வுநிலை அதிபர் வ. ஆறுமுகம், ஸ்ரீ சோமாஸ்கந்த கல்லூரி அறக்கொடை நிதிய வாழ்நாள் உறுப்பினர் த. விஸ்வலிங்கம், கல்லூரியின் ஓய்வுநிலை பிரதிஅதிபர வ. சிவலீலாதேவி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)