
posted 19th September 2022
அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட ஒலுவில் பொது நூலகத்திற்கென நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடமொன்று நிர்மாணிக்ககப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா எடுத்துக்கொண்ட பெரு முயற்சியின் பயனாக, பிரதேச சபையினால் 19 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் இந்த புதிய நூலகக் கட்டிடம் நிர்மானிக்கப்பட்டுள்ளது.
ஒலுவில் நூலகம் பல்வேறு வசதியீனங்களுடன், பழைய கட்டிடமொன்றில் மிக நீண்ட காலமாக இயங்கி வந்த அவலம் குறித்து பிரதேச சபைத் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டிருந்தது.
இதன் பயனாகவே எல்.டி.எஸ்.பி. திட்டம் மற்றும் பிரதேச சபையினதும் நிதிப்பங்களிப்புடன் இந்த நூலகத்திற்கெனப் பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நூலகக் கட்டிடத்தின் திறப்பு விழா பிரதேச சபைத்தவிசாளர் ஏ.எல். அமானுல்லா தலைமையில் கோலாகலமாக நபைபெற்றது.
திறப்பு விழாவில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமனற் உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன், புதிய நூலகக் கட்டிடத்தையும் வைபவ ரீதியாகத் திறந்து வைத்தார்.
திறப்பு விழாவில் தலைவர் ரவூப் ஹக்கீம் உரையாற்றுகையில்;
“நாட்டில் தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தப்போவதாக ஜனாதிபதியும், அரசும் கூறிக்கொண்டு தேர்தல்களை ஒத்திவைப்பதில் முனைப்புக் காட்டுகின்றது. இத்தகைய செயற்பாடுகளை நாம் முறியடிப்போம்” என்றார்.
முன்னாள் மாகாண சபை அமைச்சரும், முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினருமான எம்.எஸ். உதுமா லெவ்வை, மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கமல் நெத்மினி, உயர்பீட உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர் உட்பட பிரதேச சபை உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY