
posted 7th September 2022
மன்/வேப்பங்குளம் முஸ்லீம் மகா வித்தியாலயத்துக்கான புதிய அதிபராக ஏ.சி. சரிபுத்தீன் நியமனம் பெற்று வந்ததைத் தொடர்ந்து அப் பகுதி மக்கள் அவருக்கு முஸ்லீம் கலாச்சாரத்துக்கு அமைவாக அமோக வரவேற்பு அளித்தனர்.
ஏ.சி. சரிபுத்தீன் தாராபுரம் பாடசாலையிலிருந்து இப் பாடசாலைக்கு இடம்மாற்றம் பெற்று வந்ததைத் தொடர்ந்து இப் பாடசாலையின் நிர்வாகத்துடன் இணைந்து அவ்வூர் அமைப்புக்கள், பெற்றோர், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் உட்பட பலர் இப் புதிய அதிபரை வரவேற்றனர்.
வெள்ளிக்கிழமை (02.09.2020) நடைபெற்ற இப் வரவேற்பு விழாவுக்கான சகல ஒழுங்குகளையும் இப் பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் பௌஸி சஹீட் தலைமையில் மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்க்பட்டது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)