பிள்ளையான் கட்சி தாவலின்றி எம்மோடு தொடர்ந்து பயணித்து வருகின்றார். நாமல் ராஜபக்ச

பிள்ளையான் அன்று தொடக்கம் இன்று வரை தான் கொண்ட கொள்கைகளில் மாற்றமின்றி கட்சி தாவலின்றி எம்மோடு தொடர்ந்து பயணித்து வருகின்றார். ஆகவே, அவரது கட்சி நிகழ்வுகளில் நாம் கலந்து கொள்வது எமது தர்மீகக் கடமையாகும் என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச பாராளுமன்ற அமர்வில் இல்லாத சமயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்சவின் செயல்பாட்டினைக் குறித்து உரையாற்றியதைக் கண்டித்து நாமல் ராஜபக்ச தெரிவிக்கையில்;

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வந்த பின் நாங்கள் தமிழர் பிரதேசங்களில் அபிவிருத்திகளையும், தமிழ் மக்களின் உடனடி தேவைகளையும் நிறைவேற்றும் பணிகளில் ஈடுபட்ட போது சாணக்கியன் கொழும்பு இரவு விடுதிகளில் கும்மாளமடித்துக் கொண்டிருந்தார்.

அன்று இரவு விடுதிகளுக்குள் முடிங்கியிருந்த தம்பி சாணக்கியன் இப்போது தனது சயநல அரசியலுக்காக எம்மை விமர்சிக்கத் தொடங்கியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல அபிவிருத்தி திட்டங்கள் உதவிகளை அப்பகுதி மக்களுக்கு நாங்கள் செய்திருந்த போது அவற்றை சாணக்கியன் பார்த்தே இருக்க மாட்டார்.

ஆகவே, இவ்வாறான சுயநல அரசியல்வாதிகளுக்கு எம்மை போன்ற மக்கள் தொண்டர்களை விமர்சிக்கும் அருகதையும் கிடையாது.

பிள்ளையான் அன்று தொடக்கம் இன்று வரை தான் கொண்ட கொள்கைகளில் மாற்றமின்றி கட்சி தாவலின்றி எம்மோடு தொடர்ந்து பயணித்து வருகின்றார்.

ஆகவே, அவரது கட்சி நிகழ்வுகளில் நாம் கலந்து கொள்வது எமது தர்மீக் கடமையாகும்.

நாங்கள் இப்பொழுதும் எமக்கு வாக்களித்த மக்களை பயமின்றி சந்தித்துக் கொண்டுதான் இருக்கின்றோம்.

ஆனால், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களால் ஓட ஓட விரட்டியடிக்கப்பட்டதையும், லண்டன் கூட்டத்தை இரத்து செய்யும் நிலையேற்பட்டதையும் சாணக்கியன் மறந்துவிடக் கூடாது என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பிள்ளையான் கட்சி தாவலின்றி எம்மோடு தொடர்ந்து பயணித்து வருகின்றார். நாமல் ராஜபக்ச

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)