
posted 2nd September 2022
யாழ்ப்பாண மாவட்ட உடுவில் தொகுதிமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வி. தர்மலிங்கத்தின் 37ஆம் ஆண்டு நினைவஞ்சலி இன்று (02) வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் தாவடியிலுள்ள அவரின் நினைவுத் தூபியில் நேற்று காலை 7 மணியளவில் வலி. தெற்கு பிரதேச சபை உப தவிசாளர் இ. பரமேஸ்வரலிங்கம் தலைமையில் குறித்த நினைவஞ்சலிகள் இடம்பெற்றது.
இதன்போது நினைவுத் தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
நினைவஞ்சலியில் வி. தர்மலிங்கத்தின் மகனும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான த. சித்தார்த்தன், இலங்கைத் தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, வட மாகாண சபை அவைத்தலைவர் சீ. வீ. கே. சிவஞானம், சமூக செயல்பாட்டாளர் ம. செல்வின், வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பா. கஜதீபன், உள்ளூராட்சி சபை தவிசாளர்கள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
23 வருடங்கள் மானிப்பாய் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த வி. தர்மலிங்கம் 1985ஆம் ஆண்டு செப்ரெம்பர் 2 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டார். இதே நாளில், பாராளுமன்ற உறுப்பினர் மு. ஆலாலசுந்தரமும் கொலையானார் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)