
posted 22nd September 2022
நிந்தவூர்ப பிரதேச மக்கள் நலன் கருதி வாராந்த சந்தை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நிந்தவூர் பொதுச் சந்தையை நிர்வகித்துவரும் நிந்தவூர் பிரதேச சபை இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
இதன்படி நிந்தவூர் பொதுச் சந்தை வளாகத்தில் பிரதி வாரமும் செவ்வாய்க் கிழமைகளில் இந்த வாராந்த சந்தை கூடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த வாராந்த சந்தைக்கென முக்கிய பல பிரதேசங்களிலிருந்தும் மரக்கறி மற்றும் மக்களின் அன்றாட நுகர்வுக்கான பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் அழைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக அம்பாறை மாவட்டத்திலுள்ள சிங்களப் பிரதேசங்களிலுள்ள வியாபாரிகள் இந்த வாராந்த சந்தைக்கு வியாபாரத்திற்காக வருகை தரவும் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
இதனால் இந்த வாராந்த சந்தையில் வியாபாரம் களைகட்டுவதுடன், பொதுமக்கள் மலிவு விலைகளிலும் மரக்கறி வகைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்யக்கூடிய வாய்ப்புக்கள் கிடைத்துள்ளன.
இந்தவாரம் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள வாராந்த சந்தையை மக்கள் வரவேற்றுள்ள அதேவேளை, நன்மை பயக்கும் வகையிலான இந்த மக்கள் நலன் திட்டத்திற்கு ஆவன செய்த பிரதேச சபைத்தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிரை வெகுவாககவும் பாராட்டியுள்ளனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)