நானாட்டான் பிரதேச சபையின் மேல்மாடி அலுவலகக் கட்டிடம் திறப்பு விழா

மன்னார் மாவட்டம் நானாட்டன் பிரதேச சபையின் மேல்மாடி அலுவலகக் கட்டிடம் புதன்கிழமை (28) காலை உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஸ்ரீவர்ணன் நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளர் .பரஞ்சோதி, உப தவிசாளர் லூர்துநாயகம் புவனம் மற்றும் அழைக்கப்பட்ட விருந்தினர்கள் இணைந்து அலுவலகக் கட்டிடத்தை திறந்து வைத்தார்கள்.

மேலும் இந்த நிகழ்வில் மதத்தலைவர்கள், நானாட்டான் பிரதேச சபையின் உறுப்பினர்கள், மன்னார் மற்றும் நானாட்டான் பிரதேச சபையின் செயலாளர்கள், நானாட்டான் பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர், மற்றும் நானாட்டான் பிரதேச சபையின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டார்கள்.

நானாட்டான் பிரதேச சபையின் மேல்மாடி அலுவலகக் கட்டிடம் திறப்பு விழா

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)