
posted 8th September 2022
செம்மணியில் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சுண்டுக்குளி மாணவி குமாரசாமி கிருசாந்தியின் 26ஆவது ஆண்டு நினைவேந்தல் நேற்று (07) முன்னெக்கப்பட்டது. இதன்போது, அப்பகுதியில் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட ஏனையவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழ்த் தேசிய கட்சியின் ஏற்பாட்டில் நேற்று முற்பகல் 10 மணியளவில் இந்த நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.
இந்த நினைவேந்தலில் முன்னாள் எம். பி., எம். கே. சிவாஜிலிங்கம், வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பா. கஜதீபன், தமிழ்த் தேசியக் கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
1996ஆம் ஆண்டு செப்ரெம்பர் 7ஆம் திகதி சுண்டுக்குளி மாணவி கிருசாந்தி செம்மணி இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டு, பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டார். இதேபோன்று, அவரை தேடிச் சென்ற தாயார், சகோதரன், அயலவர் என மூவரும் கொல்லப்பட்டு செம்மணியில் புதைக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)