நாகர்கோவில்  பாடசாலை படுகொலை அஞ்சலி

இலங்கை விமானப்படையின் குண்டு வீச்சினால் இனப்படுகொலை செய்யப்பட்ட 21 மாணவர்களின் நாகர்கோவில் படுகொலையின் 27 வது ஆண்டு நினைவேந்தல் இன்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் கே. சிவாஜிலிங்கத்தால் நேற்று (23) காலை 12:00 மணியளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில் படுகொலை நாளான நேற்று நாகர்கோவில் பாடசாலை அருகாமையில் எம் கே சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் சதீஸ் உட்பட்டவர்கள் நினைவேந்தலில் ஈடுபட்டனர்.

முதன் நிகழ்வாக விமானப்படையால் கொல்லப்பட்ட 21 பாடசாலை மாணவர்கள் நிகழ்வாக பொதுச் சுடரை தமிழ் தேசிய கூட்டமைப்பு பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் ஆ. சுரேஸ்குமார் ஏற்றியதை தொடர்ந்து முன்னாள் பாளாறுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகமுமான எம் கே சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் ஆகியோர் ஏற்றியதுடன் அகவணக்கம் செலுத்தி மலரஞ்சலியும் செலுத்தினர்.

அங்கு கருத்து தெரிவித்த எம் கே சிவாஜிலிங்கம்,

தமிழ் இனப்படுகொலையாளிகளைச் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் (International Criminal Court - ICC ) நிறுத்தவேண்டும் என்றும், கட்டாயமாகக் காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் (Enforced Disappered Persons) விடயத்தில் சர்வதேச நீதி கிடைக்க வேண்டும் என்றும், மீண்டும் இனப் படுகொலைகள் இடம் பெறாதிருக்கக்கூடிய பாதுகாப்பு பொறிமுறைகளை ஏற்படுத்துமாறும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (Prevention of Terrorism ACT) நீக்கப்பட்டு தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும், ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களின் அடிப்படையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமையைப் (Self - Determination) பாவித்து தமிழ்தேசிய இனம் (Tamil Nation) தமது சுய நிர்ணய உரிமையைப் பாவிக்கக் கூடியதாக இலங்கையின் வடக்கு - கிழக்கு மாநிலத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்புடன் புலம்பெயர் தமிழர்கள் உட்பட அனைவரும் வாக்களிக்கக்கூடிய விதத்தில் சுதந்திரமா? சுயாட்சியா? என்ற பொதுசன வாக்கெடுப்பு (Referendum for Independence or Autonomy ) ஒன்றை நடாத்த முன்வருமாறு சர்வதேச சமூகத்திடம் (International Community ) வேண்டுகோள் விடுத்ததுடன், நாகர்கோவில் விமானக்குண்டு வீச்சில் படுகொலை செய்யப்பட்ட 22 மாணவர்களுக்கும் எமது கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்வதுடன் அவர்களுக்குமான நீதி கிடைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

நாகர்கோவில்  பாடசாலை படுகொலை அஞ்சலி

குண்டுவீச்சால் பரிதாபமாகக் கொல்லப்பட்ட இரு மாணவர்களின் நினைவேந்தல்

வடமராட்சி கிழக்கு நாகர்கோயில் மகா வித்தியாலயம் மீதான விமானப் படையின் குண்டுவீச்சில் பலியான 21 மாணவர்களின் 27ஆவது ஆண்டு நினைவேந்தல் வியாழக்கிழமை (22) உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில், கொல்லப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் கதறி அழுது தங்கள் அஞ்சலியை செலுத்தினர்.

1995 செப்ரெம்பர் 22ஆம் திகதி விமான படையினரின் புக்காரா விமானம் வீசிய குண்டு தாக்குதலில் நாகர்கோவில் மகா வித்தியாலயத்தின் 21 மாணவர்கள் கொல்லப்பட்டனர். இவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத் தூபியில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இரு பிள்ளைகளைப் பறிகொடுத்த தந்தையான சுந்திரலிங்கம் பிரதான சுடரை ஏற்றிவைத்தார்.

அதனைத் தொடர்ந்து சுடர்கள் ஏற்றப்பட்டன. அடுத்து, நினைவுத் தூபிக்கும் மாணவர்களின் உருவப் படங்களுக்கும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.



வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் விமானப் படையினரின் குண்டு வீச்சில் கொல்லப்பட்ட 21 மாணவர்களின் 27 நினைவேந்தல்.....!

நாகர்கோவில் விமானப் படையினரின் குண்டு வீச்சு தாக்குதலில் கொல்லப்பட்ட 21 மாணவர்களின் 27 நினைவேந்தல் நேற்றைய தினம் (22) மதியம் 12:05 மணிக்கு அதன் ஏற்பாட்டுக்குழு தலைவர் சிவாயநம தலமையில் நாகர்கோவில் மகா வித்தியாலய பாடசாலையில் அமைக்கப்பட்ட நினைவுத் தூபியில் இடம் பெற்றது.

1995 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அன்று விமான படையினரின் புக்காரா விமானம் வீசிய குண்டு தாக்குதலில் நாகர்கோவில் மகாவித்தியத்தின் 21 மாணவர்கள் பலியாகினர்.

அவர்களின் 27 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வே இடம் பெற்றது.

முன்பதாக முற்பகல் 11மணியளவில் ஆலயத்தில் ஆத்மா சாந்தி பிரார்த்தனை இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து நண்பகல் 12:05 மணியளவில் பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு முன்பாக, இரண்டு பிள்ளைகளை பறிகொடுத்த சுந்தரலிங்கம் பொது ஈகைச் சுடரினை ஏற்றி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து சுடர்கள் பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள், உறவுகள் சுடர் ஏற்றியதுடன் மலர்மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து பாடசாலை மண்டபத்தில் 21 மாணவர்களின் உருவப் படங்கள் வைக்கப்பட்டு படுகொலைக்கு உள்ளான மாணவர்களது பெற்றோர்கள், உறவுகள் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

இதில் நினைவுரைகளை குறித்த படுகொலை செய்யப்பட்ட காலப்பகுதியில் பாடசாலை முதல்வராக இருந்த திரு. மகேந்திரன், மற்றும் தற்போதைய அதிபர் கண்ணதாசன் ஆகியோர் நினவுரை ஆற்றினர்.

இந்நினைவேந்தலில் பாடசாலை அதிபர், ஒரு சில ஆசிரியர்கள், மற்றும் கொல்லப்பட்ட மாணவர்களின் உறவுகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

நாகர்கோவில்  பாடசாலை படுகொலை அஞ்சலி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY