
posted 24th September 2022
“நாடளாவிய ரீதியில் சகல பிரதேச செயலகப் பிரிவிலும் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மத்தியஸ்த்த சபைகள் மக்களிடத்தில் நல்லபிமானத்தையும், வரவேற்பையும் பெற்றுத் திகழ்கின்றன. இந்த வகையில் நிந்தவூர் மத்தியஸ்த சபை (4ஆவது சபை) ஏழு வருடங்களைப்பூர்த்தி செய்து எட்டாவது வருடத்தில் கால்பதிக்கின்றது.”
இவ்வாறு, நிந்தவூர் மத்தியஸ்தசபையின் தவிசாளரும், ஓய்வு பெற்ற ஆசிரியையுமான ஜனாபா. பல்கீஸ் அப்துல் மஜீத் கூறினார்.
நிந்தவூர் பிரதேச செயலகப் பிரிவிற்கான நான்காவது மத்தியஸ்த சபை ஏழு வருடங்களைப் பூர்த்தி செய்து எட்டாவது வருடத்தில் காலடிபதிக்கும் முதலாவது அமர்வில் தொடக்க உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
ஓய்வு பெற்ற அதிபரும், மத்தியஸ்த சபை உறுப்பினருமான எஸ். அகமதுவின் நற்சிந்தனை உரையுடனும், பிரதி தவிசாளரும் ஓய்வு பெற்ற அதிபருமான யூ.எல்.ஏ. முபாறக்கின் வேற்புரையுடனும் அமர்வு ஆரம்பமானது.
தவிசாளர் பல்கீஸ் அப்துல் மஜீத் தொடர்ந்து உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.
“நாடளாவிய ரீதியில் மத்தியஸ்த சபைகள் மக்களின் ஆதரவையும், நன்மதிப்பையும் வென்று சிறந்த பணியை ஆற்றிவருகின்றன.
மத்தியஸ்த சபைகள் நீதமானதும், உன்னதமானதுமான பணியை ஆற்றுவதனுடாக சமூகத்தில் எழுந்து கொண்டிருக்கும் அனேகமான பிணக்குகளைச் சுகமாகத் தீர்த்து வைப்பதில் வெற்றிகண்டு வருகின்றன.
நீதி அமைச்சின் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழு 1988 ஆம் ஆண்டின் 72 ஆம் இலக்க மத்தியஸ்த சபைகள் சட்டத்தின்படி முன்னூறுக்கு மேற்பட்ட மத்தியஸ்த சபைகளை ஸ்தாபித்து, இந்த வெற்றிகரமான பணியை நாடளாவிய ரீதியில் தொடர்ந்துவருகின்றது.
குறிப்பாக நீதிமன்றங்களி; தேங்கியிருக்கும் வழக்குகளில் சிறிய பிரச்சினைகளை செலவு குறைவாகவும், கால தாமதமின்றியும் இருசாராருக்கும் வெற்றி என்ற வகையில் பிணக்குகளைத் தீர்த்துவைப்பதில் நமது மத்தியஸ்த சபைகள் சிறப்பாகச் செயற்பட்டுவருகின்றன
இந்த வகையில் கடந்த ஏழு வருடகாலமாக நிந்தவூர் மத்தியஸ்த சபையின் வெற்றிகரமான செயற்பாட்டுக்கு கட்டுக்கோப்புடனும், முன்னுதாரனமகவும் செயற்பட்ட சகல மத்தியஸ்தர்களுக்கும் பாராட்டையும் நன்றியையும் தெரிவிக்கின்றேன்” என்றார்.
கடந்த ஏழு வுருடகால சேவையின் போதும், சிறந்த தலைமைத்துவம் வழங்கி, தலைமைத்துவப் பண்புகளுடன் , தாம் ஒரு பெண்ணாக இருந்தும் சிறப்புற வழி நடத்தி வரும் தவிசாளர் பல்கீஸ் அப்துல் மஜீதை உறுப்பினர்கள் பலரும் விதந்துபாராட்டினர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY