நடவடிக்கை வெற்றிகரம்

நிந்தவூர்ப்பிரதேசத்தில் அனுமதியற்ற முறையில் முன்னெடுக்கப்பட்டு வந்த அங்காடி வியாபார நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இப்பிரதேசத்தின் முக்கிய சில வீதிகளையும், முக்கிய சந்திகளையும் ஆக்கிரமித்து முன்னெடுக்கப்பட்ட இந்த அங்காடி மீன் மற்றும் வியாபார நடவடிக்கைகளால் பொது மக்கள் பெரும் சிரமங்களையும், சுகாதாரச் சீர்கேடுகளையும் நீண்ட காலமாக அனுபவித்து வந்தனர்.

இது குறித்து நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிரின் கவனத்திற்கு பொது மக்கள் கொண்டு வந்ததையடுத்து, அவர் எடுத்துக் கொண்ட நடவடிக்கையின் பயனாக அனுமதியற்ற அங்காடி வியாபாரம் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளதுடன், புணரமைக்கப்பட்ட பொதுச் சந்தையில் மீன் விற்பனை உட்பட சகல வியாபாரங்களையும் முன்னெடுக்க ஆவன செய்யப்பட்டுள்ளது.

தவிசாளர் தாஹிர் எடுத்துக் கொண்ட இந்த நடவடிக்கை வெற்றிகரமாக அமைந்துள்ள அதேவேளை, பொதுச் சந்தையை பயன்படுத்த வியாபாரிகளும், நுகர்வோரான பொது மக்களும் ஆர்வத்துடன் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது.

நடவடிக்கை வெற்றிகரம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)