
posted 2nd September 2022
மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களமும், வவுனியா பிரதேச செயலகமும் இணைந்து நடத்தும் தொழில் தேடும் இளைஞர், யுவதிகளுக்கான விசேட நிகழ்ச்சித்திட்டம் வவுனியா பிரதேசசெயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (02) காலை இடம்பெற்றது.
இதன்போது உள்நாட்டு, வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் மற்றும் திறன் விருத்தி தொடர்பான தெளிவுபடுத்தல்களுடன் அவர்களின் எதிர்கால தொழில் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான வழிகாட்டல்களும் இடம்பெற்றிருந்தன.
இந்த நிகழ்வில் வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன், மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள், தொழில் தேடுநர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)