
posted 24th September 2022
முன்மொழியப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழு தீர்மானங்களை முறைப்படுத்துவதற்காகவும், மக்கள் மயப்படுத்துவதற்காகவும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் தேர்தல் சட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் தொர்பிலான தொடர் கலந்துரையாடல் மன்னாரிலும் நடைபெற்றது.
மன்னார் நகரில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் வியாழக்கிழமை (22.09.2022) மன்னார் மாவட்ட பதில் உதவி தேர்தல் ஆணையாளர் கந்தையா நிர்மலரூபன் தலைமையில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை இந் நிகழ்வு இடம்பெற்றது.
இந் நிகழ்வில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி. புஞ்சிஹேவா , தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க, ஜனநாய சீர்திருத்தம் மற்றும் தேர்தல் ஆய்வுகள் நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க இவர்களுடன் தேர்தல் ஆணைக்குழுவைச் சார்ந்த உறுப்பினர்களும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் மன்னார் மாவட்டத்தில் இக் கலந்துரையாடலுக்கு தெரிவு செய்யப்பட்ட மன்னார் மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் நபர்களாக பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் உறுப்பினர்கள் மாற்றாற்றல் கொண்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் சிவில் அமைப்பு மற்றும் சமூக ஆர்வலர்கள் ஊடகவியலாளர்கள் ஆசிரியர்கள் என பலர் அழைக்கப்பட்டு இதில் கலந்து கொண்டனர்.
இக் கலந்துரையாடலின்போது தேர்தல் ஆணைக்குழுவின் வேலைத்திட்டம் மற்றும் தேர்தல் சட்டங்களை திருத்துவதற்கான அதன் கண்ணோட்டம் பற்றிய பகுப்பாய்வு வழக்கறிஞரும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருமான நிமல் ஜி. புஞ்சிஹேவா என்பவரால் மிகவும் தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்டது.
அத்துடன் ஜனநாயக சீர்திருத்தம் மற்றும் தேர்தல் ஆய்வுகள் நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க அவர்களால் தற்போதைய தேர்தல் முறையை சீர்திருத்த வேண்டியதன் அவசியம் மற்றும் அதில் சிவில் சமூகத்தின் பங்கு என்ற தலைப்பில் உரையாற்றினார்.
இதன்போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் உரையாற்றியதுடன் இதில் பங்கு பற்றியோரின் தங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளும் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY