
posted 20th September 2022
தியாக தீபம் திலீபனின் உருவப் படம் தாங்கிய ஊர்தி நேற்று திங்கள் (19) வவுனியாவை சென்றடைந்தது. இந்த ஊர்திக்கு மக்கள் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ‘திலீபன் வழியில் வருகின்றோம்’ என்ற ஊர்தி பவனி அம்பாறை - பொத்துவிலில் ஆரம்பித்து நல்லூரை நோக்கி செல்கின்றது.
5ஆம் நாளான நேற்று இந்த ஊர்தி வவுனியாவை சென்றடைந்தது. பண்டாரவன்னியன் சதுக்கம், பொங்கு தமிழ் நினைவுத்தூபி, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்ட தளம், மொத்த மரக்கறி விற்பனை நிலையம், இலுப்பையடி என நகரின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் உணர்வெழுச்சியுடன் ஊர்தியில் இருந்த தியாகி திலீபனின் படத்துக்கு தீபம் ஏற்றியும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)