தியாக தீபம் திலீபன் நினைவேந்தலை முன்னெடுக்க 15 பேர் கொண்ட பொதுக் கட்டமைப்பு

அனைத்துத் தரப்புகளையும் ஒன்றிணைத்து தியாக தீபம் திலீபன் நினைவேந்தலை முன்னெடுக்க 15 பேர் கொண்ட பொதுக் கட்டமைப்பு அமைக்கப்பட்டது.

நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீனத்தில் நேற்று திங்கள் (19) நடைபெற்ற கூட்டத்திலேயே இந்தப் பொதுக் கட்டமைப்பு உதயமானது.

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் ஒழுங்கமைப்பது, பொதுக் கட்டமைப்பை அமைப்பது தொடர்பில் யாழ். மாநகர முதல்வர் வி. மணிவண்ணனின் ஏற்பாட்டில் 17ஆம் திகதி நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவே நேற்று நல்லை ஆதீனத்தில் கூடி பொதுக் கட்டமைப்பை உருவாக்கியது.

இந்தக் கூட்டத்தில், மதத் தலைவர்கள், நாவலர் கலாசார மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்கத் தவறிய அமைப்புகள், அரசியல் கட்சிகள் என்பனவற்றுடன் கலந்துரையாடி 15 பேர் கொண்ட பொதுக் கட்டமைப்பு குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவில் நல்லூர் சிவகுரு ஆதீன முதல்வர், வேலன் சுவாமிகள், யாழ்ப்பாணம் மறை மாவட்ட குரு முதல்வர் ஜெ. ஜெபரட்ணம் அடிகளார் ஆகியோருடன் முன்னாள் போராளிகளின் மாவீரர்களின் பெற்றோரின் பிரதிநிதிகள், காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் பிரதிநிதிகள், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளும் உள்ளடக்கப்பட்டனர்.

மதத் தலைவர்களின் வழிகாட்டலில் இந்தப் பொதுக் கட்டமைப்பு இயங்கும். அத்துடன், அனைத்து கட்சிகள் மற்றும் தரப்பினரை ஒன்றிணைத்து இந்தப் பொதுக் கட்டமைப்பு நினைவேந்தலை தொடர்ச்சியாக முன்னின்று நடத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தியாக தீபம் திலீபன் நினைவேந்தலை முன்னெடுக்க 15 பேர் கொண்ட பொதுக் கட்டமைப்பு

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY