திட்டமிடல் சேவையில்லுள்ளவர்களுள் கலாநிதி பட்டம் பெற்ற  முஹம்மட் அஸ்லம்

இலங்கை திட்டமிடல் சேவையின் சிரேஷ்ட அதிகாரியான ஏ.எல். முஹம்மட் அஸ்லம் பேராதனை பல்கலைக் கழகத்தில் பொருளியல் துறையில் கலாநிதி பட்டம் பெற்றுள்ளார்.

பேராதனை பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே இத்துறையில் தத்துவ முதுமாணிப் பட்டத்தை பெற்றுள்ள இவர் தென்கிழக்கு பல்கலைக்கழக வரலாற்றில் பொருளியல் துறையில் முதல் தடவையாக முதலாம் வகுப்பு சித்தி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் திட்டமிடல் பிரதிப் பணிப்பாளராக கடமையாற்றும் இவர் மாத்திரமே தற்போது சேவையிலுள்ள திட்டமிடல் சேவை உத்தியோகத்தர்களுள் கலாநிதி பட்டத்தை பெற்றவராவார்.

சர்வதேச ரீதியில் வெளியாகும் பல்வேறு பொருளியல் சஞ்சிகைகளில் இவரது ஆய்வுக் கட்டுரைகள் வெளியாகியுள்ளன.

சாய்ந்தமருதைச் சேர்ந்த மர்ஹும்களான ஆசிரியர் எம். அகமட்லெப்பை - நூறுல் மசாஹிறா ஆகியோரின் கனிஷ்ட புதல்வரான இவர் சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலயம், கல்முனை சாஹிறா தேசிய பாடசாலை என்பவற்றின் பழைய மாணவராவார்.

திட்டமிடல் சேவையில்லுள்ளவர்களுள் கலாநிதி பட்டம் பெற்ற  முஹம்மட் அஸ்லம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)