
posted 30th September 2022
சிறீலங்கா முஸ்லிம் உலமா கட்சி மீண்டும் மீளெழுச்சியுடன் இயங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை உலமாக்களுக்கான அரசியல் கட்சியின் தேவையும், அவசியமும் உணரப்பட்டுள்ளதால், இனி சிறீலங்கா முஸ்லிம் உலமாக்கட்சி, மௌலவி. முபாறக் அப்துல் மஜீத் தலைமையில் தனித்துவேறாக இயங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது விடயமாக சிறீலங்கா முஸ்லிம் உலமாகட்சியின் செயலாளர் மௌலவி ஹாரூன் மரிக்கார் பின்வருமாறு தெரிவித்துள்ளார்;
2005ம் ஆண்டு முதல் முஸ்லிம் உலமா கட்சி என்ற பெயரில் இயங்கி வந்த கட்சி 2021ம் ஆண்டு ஐக்கிய காங்கிரஸ் கட்சி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இது பற்றி தேர்தல் திணைக்களத்துக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே வேளை 2015ம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட "ஸ்ரீலங்கா முஸ்லிம் உலமா கட்சி" சில காலம் இயங்காத நிலையில் இருந்து வந்தது யாவரும் அறிந்ததே.
இலங்கை உலமாக்களுக்கான அரசியல் கட்சியின் தேவையை விட்டு விட முடியாது என்பதால் இனி "ஸ்ரீலங்கா முஸ்லிம் உலமா கட்சி" என்ற கட்சி மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தலைமையில் தனித்து வேறாக இயங்கும் என தெரிவித்துக் கொள்கிறோம்.
அதே வேளை ஐக்கிய காங்கிரஸ் கட்சி தனியாக இயங்குவதுடன், அதன் உலமா உறுப்பினர்கள் தாம் விரும்பின் "ஸ்ரீலங்கா முஸ்லிம் உலமா கட்சி"யின் உறுப்பினர்களாகவும் செயல்படுவதற்கு எவ்வித தடையும் இல்லை. ஆனாலும் "ஸ்ரீலங்கா முஸ்லிம் உலமா கட்சி"யின் கொள்கைகளும் கருத்துக்களும் ஐக்கிய காங்கிரஸ் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)