
posted 20th September 2022
அம்பாறை மாவட்டத்திலுள்ள நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் அ. ஆனந்த, தனக்கு கிடைக்கும் தவிசாளருக்கான மாதாந்த சம்பளத்தை பொதுப் பணிகளுக்கு அன்பளிப்புச் செய்து வருகின்றார்.
தவிசாளர் ஆனந்த, தாம் பதவியேற்ற காலம் முதல், தமக்கு கிடைக்கும் மாதாந்தம் சம்பளத்தை பொதுப்பணிகளுக்கு வழங்கும் முன்மாதிரி செயற்பாட்டைத் தொடர்ந்து வருகின்றார்.
குறிப்பாக ஏழை மாணவர்களின் கல்வி அபிவிருத்தி செயற்பாடுகளுக்கென தமது சம்பளத்தை வழங்கிவரும் தவிசாளர் ஆனந்த குறிப்பாக எவ்வித பேதமுமின்றி அறநெறிப் பாடசாலைகள் மற்றும் அகதியாப் பாடசாலை மாணவர்களுக்கும் உதவிவருகின்றார்.
இந்த முன்மாதிரி செயற்பாட்டின் ஓர் அங்கமாக மத்திய முகாம் 11 ஆம் கிராமம் பாரதி முன்பள்ளி, 12ஆம் கிராமம் அஸ் - சிறாஜ் தேசியப் பாடசாலை மாணவர் நலன் கருதி கடந்த மாத தனது தவிசாளர் வேதனத்தை உரிய பாடசாலைகளின் பொறுப்பாசிரியர்களிடம் கையளித்தார்.
அரசியலில் மட்டுமன்றி மிக நீண்டகாலமாக பின் தங்கிய மக்கள் சார்ந்த சமூகப் பணிகளிலும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிவரும் தவிசாளர் ஆனந்தவின் இத்தகைய எடுத்துக்காட்டான, முன்மாதிரி நடவடிக்கைகளைப் பொது மக்கள் பெரிதும் வரவேற்பதுடன், பாராட்டுடன் நன்றிகளையும் தெரிவிக்கின்றனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)