டீசல் இன்மையால் தனியார் போக்குவரத்து  ஸ்தம்பாதம் - வாகேசன்

மன்னார் மாவட்டத்தில் சேவையில் ஈடுபட்டுவரும் தனியார் போக்குவரத்து சேவைகளுக்கு சீரான முறையில் டீசல் எரிபொருள் கிடைக்கப் பெறாமையால் தங்கள் சேவைகளை தகுந்த முறையில் முன்னெடுக்க முடியாத நிலையில் இருப்பதாக இதன் செயலாளர் எம். வாகேசன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட தனியார் போக்குவரத்து சேவை செயலாளர் எம் வாகேசன் மேலும் தெரிவிக்கையில்;

மன்னார் மாவட்டத்தில் தனியார் போக்குவரத்து சேவையில் 75 பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபட்டு வருகின்றன.

இவ் பஸ் வண்டிகள் தாழ்வுபாடு , பேசாலை . தலைமன்னார் , பெரியமடு . வட்டக்கண்டல் , மடு , யாழ்ப்பாணம் . வவுனியா போன்ற முக்கிய இடங்களுக்கெல்லாம் எங்கள் தனியார் போக்குவரத்து சேவைகள் இடம்பெற்று வருகின்றன.

குறிப்பாக பாடசாலை மாணவர்கள் மற்றும் வேலைகளுக்கு செல்லுபவர்களின் நலன்நோக்கி எமது சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், எமக்கு கடந்த சனி (03), ஞாயிறு (04) மற்றும் திங்கள் கிழமை (05) தினங்களில் டீசல் எரிபொருளின்மையால் எமது சேவைகள் மட்டுப்படுத்தப்பட வேண்டிய நிலை எற்பட்டுள்ளது.

இந்த நிலை தொடருமாகில் மன்னாரில் தனியார் போக்குவரத்து சேவைகள் முற்றாக ஸ்தம்பிதம் அடையும் அபாயம் தோன்றும் எனவும், ஆனால், முன்பு எரிபொருள் விநியோகம் மன்னார் இலங்கை போக்குவரத்து சபையின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்போது அவர்களிடமிருந்து நாங்கள் பெற்று வந்தோம். தற்பொழுது இவ் எரிபொருள் வட மாகாண வீதி போக்குவரத்து அதிகார சபைக்கு ஒப்படைத்த பின் எமக்கு சீராக கிடைப்பதில்லை என வாகேசன் தெரிவித்தார்.

டீசல் இன்மையால் தனியார் போக்குவரத்து  ஸ்தம்பாதம் - வாகேசன்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)