
posted 3rd September 2022
யாழில் மூன்று இடங்களில் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட இருவர் ஊர்காவற்துறை, நாராந்தனை பகுதியில் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்,
யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையம், யாழ் போதனா வைத்தியசாலை, குருநகர் சின்னகடை சந்தை ஆகிய பகுதிகளில் சைக்கிள்களை திருடிய இருவர் நாராந்தனை பகுதியில் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
37, 38 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மூன்று சைக்கிள்களும் பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பான பொலீஸ் நிலையத்தில் விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு மீட்கப்பட்ட சைக்கிள்களில் ஒரு சைக்கிளுக்கு மாத்திரம் சைக்கிள் தொலைத்தவர்களால் முறைப்பாடு பதியப்பட்டுள்ளதாகவும் ஏனைய சைக்கிளுக்கு முறைப்பாடு இல்லை எனதெரிவிக்கப்படுகின்றது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)