சிறுவர் பூங்காவை  விஸ்தரிக்க வேண்டும் பொதுமக்களின் கோரிக்கை

நிந்தவூர் பிரதேச சபையின் நிருவாகத்திலுள்ள சிறுவர் பூங்காவிற்கு வருகை தருவோரின் தொகை தினமும் அதிகரித்து வருகின்றது.

முன்னெப்போதுமில்லாத வகையில் இந்த சிறுவர் பூங்காவை உள்ளுர்வாசிகள் மட்டுமன்றி, அயல் கிராமங்களைச் சேர்ந்தோரும் தற்சமயம் நாடி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

தமது சிறு பிள்ளைகளின் விளையாட்டு, மற்றும் பொழுது போக்கை நோக்காகக் கொண்டு தினமும் இவ்வாறு பெருமளவானோர் இந்த சிறுவர் பூங்காவை விரும்பி நாடிவருவது வழக்கமாகியுள்ளது.

பெரும்பாலும் மாலை வேளைகளில் பெருமளவான சிறுவர்களுடன் பெற்றோர் வருவதால், இங்கு பொருத்தப்பட்டுள்ள விளையாட்டு உபகரணங்களைப் பயன்படுத்துவதில் இட நெருக்கடி ஏற்பட்டு பல சிறுவர்கள் ஏமாற்றமடையும் நிலையுமுள்ளது.

எனவே, தற்போதய மக்கள் வருகை நிலமையைக் கருத்திற் கொண்டும் மேலும் சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்களைப் பொருத்திவிருத்தி செய்வதற்கு நிந்தவூர் பிரதேச சபை ஆவன செய்ய வேண்டுமெனவும், பொதுமக்கள் கோருகின்றனர்.

சிறுவர் பூங்காவை  விஸ்தரிக்க வேண்டும் பொதுமக்களின் கோரிக்கை

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)