சிறப்பாக இடம் பெற்ற வீரசிங்கம் ஆரம்ப பாடசாலை மாணவர்களின் விற்பனை சந்தை

யாழ் வீரசிங்கம் ஆரம்ப வித்தியாசாலை மாணவர் சந்தை வெள்ளிக் கிழமை (16) காலை 9:00 மணியளவில் பாடசாலை மைதானத்தில் பாடசாலை அதிபர் தலமையில் சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக தென்மராட்சி வலயக்கல்வி பணிமனையை சேர்ந்த கல்வி நிர்வாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் நடராஜா காண்டீபன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு மாணவர் சந்தையை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைத்தார்.

இதில் மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் என பலரும் பங்கேற்றுருந்தனர்.

சிறப்பாக இடம் பெற்ற வீரசிங்கம் ஆரம்ப பாடசாலை மாணவர்களின் விற்பனை சந்தை

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)