
posted 5th September 2022
இந்தியா தமிழ் நாட்டின் செங்கல்பட்டு மறைமாவட்டத்தின் சந்தோஷபுரம் பங்கின் அன்னை வேளாங்கன்னி ஆலய வருடாந்த ஆண்டு பெருவிழா சனிக்கிழமை (03.09.2022) சந்தோஷபுரம் ஆலய பங்குத் தந்தை அருட்பணி அ. எட்வின் லாரன்ஸ் அடிகளார் தலைமையில் இடம்பெற்றது.
கடந்த 01.09.2022 வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய இவ் விழா வெள்ளிக்கிழமை (02.09.2022) நற்கருணை விழாவாகவும், இதைத் தொடர்ந்து 03.09.2022 சனிக்கிழமை பெருவிழா கூட்டுத் திருப்பலியும், வேளாங்கன்னி அன்னையின் திருச்சுரூப பவனியும் இடம்பெற்றது.
இவ் விழாவின்போது 'மரியாளின் ஆன்மீக வாழ்வு' . 'புதிய உடன்படிக்கை பேழை' , 'மரியாளின் மனித நேயம்' என்பன மையக்கருத்தாகக் கொண்டு சிந்திக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)