
posted 15th September 2022
சட்ட திட்டங்களுக்கு மாறாக ஆடுகள் கொண்டு செல்லப்பட்ட போது பொலிசாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலைத் தொடர்ந்து வாகனம் ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட ஆடுகள் பொலிசாரால் கைப்பற்றப்பட்டு சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மஸ்கெலியா பகுதியில் இருந்து கரவனெல்ல பகுதிக்கு வாகனம் ஒன்றில் 10 ஆடுகள் சட்டபூர்வமற்ற முறையில் கொண்டு செல்லப்பட்ட வேளையில் மஸ்கெலியா பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவல்களை தொடர்ந்து அந்த வாகனத்தை பொலிசார் மடக்கி பிடித்தனர்.
இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட ஆடுகள் அனுமதி பத்திரம் இன்றியும், மிருகவதை சட்டத்துக்கு மாறாகவும், மிருக வைத்திய அதிகாரி மூலம் வழங்கபடும் அனுமதி பத்திரம் இல்லாத நிலையிலேயும் தான் இக் கைது இடம்பெற்றுள்ளது.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சந்தேக நபர்களையும் மற்றும் வாகனத்தையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)