
posted 6th September 2022
கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உழவனூர் பகுதியில் இன்றைய தினம் 06.09.2022 கைக் குண்டு ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;
இன்று காலை தருமபுரம் பொலிசாருக்கு சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி இடம் பெறுவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சுற்றிவளைப்பினை மேற்கொண்ட பொலிசார் அவரை சோதனை செய்த போது குறித்த சந்தேக நபர் அவரது உடமையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த சந்தேக நபரைக் கைது செய்த தருமபுரம் பொலீசார் அவரிடம் மேலதிக விசாரணைகளின் போது குறித்த சந்தேக நபர் கைக் குண்டினை கைவிடப்பட்ட பகுதியிலிருந்து எடுத்ததாகவும், அக் கைக் குண்டினை போலீசாரிடம் ஒப்படைப்பதற்காக வைத்திருந்ததாகவும், தெரிவித்ததாகவும் பொலீஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை அச் சந்தேக நபரை உரிய சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த உள்ளதாகவும் தருமபுரம் பொலீஸ் நிலைய தகவல்கள் மேலுல் தெரிவிக்கின்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)