
posted 23rd September 2022
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகின்றபோது இந்த வருடம் இருமடங்காக அதிகரித்துள்ளது என்று யாழ். போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாவதால் உயிரிழப்புக்கள் சம்பவிப்பது அதிகரித்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், வெளிப்படுத்தப்பட்ட தரவுகளின் அடிப்படையில், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 10 பெண்கள் உட்பட 491 பேர் போதைப்பொருள் பாவனையாளர்களாக இருக்கின்றனர்.
இந்த வருடம் 13 பெண்கள் உட்பட 854 பேர் போதைப்பொருள் பாவனையாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன, இந்த வருடத்தில் இதுவரை 10 பேர் போதைப் பாவனையால் உயிரிழந்தனர் என்றும் அவர் கூறினார்.
மாணவர்களின் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்தத் தவறிய அதிகாரம்
போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கு யாழ்ப்பாணம் மாவட்டத்தில் காணப்படுகின்ற பாடசாலைகளின் பங்களிப்புப் போதாது என்று யாழ். போதனா மருத்துவமனையின் சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,
"யாழ். மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருகின்றது. எனினும், ஆசிரியர்கள், அதிபர்கள் தமது பாடசாலைகளில் நற்பெயருக்குக் களங்கம் வந்துவிடக்கூடாது என்தால் அது குறித்த தகவல்களை வெளிப்படுத்தாது மறைக்கின்றனர்.
இந்தச் செயல் கொலைக்குச் சமனானது. இனி இந்த விடயங்களை வெளிப்படையாகப் பேசவேண்டும். ஏனெனில் நிலைமை மோசமாகிவிட்டது.
யாழ். மாவட்டத்தின் பிரபல பாடசாலையொன்றில் அண்மையில் மூன்று மாணவர்கள் மயங்கி விழுந்தனர். பரிசோதனையின்போது அவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியிருந்தனர்.
பின்னர் பாடசாலையின் நற்பெயரைக் கருத்தில்கொண்டு சில விடயங்கள் மூடிமறைக்கப்பட்டுவிட்டன. இந்த நிலைமை கவலையளிக்கின்றது" என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY